நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -17

நல்ல மருந்து…!

 நம்ம நாட்டு மருந்து…! (17)

அஞ்சறைப்பெட்டியில் கடுகு சீரகத்தை அடுத்தபடியாக இருப்பது.

மிளகு…!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்…! என்பது பழமொழி.

 விஷமாக இருந்தாலும் அதை முறித்துவிடும் தன்மை மிளகுக்கு உண்டு என்பது அதன் பொருள்..!

 ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் மருந்துக்கு பயன்படுத்தும் திரிகடுக சூரணத்தில் மிளகுக்கு முக்கிய பங்கு உண்டு.

மிளகில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், தையமின், ரைபோப்ளேவின், நியாசின் சத்துக்கள் நிறைந்துள்ளது.

சளி, ஜலதோஷம் பிரச்சனை இருக்கும் போது உணவில் மிளகு அதிகம் சேர்க்கும் வழக்கம் அனைவருக்கும் உண்டு.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி.. 7373141119