தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் – ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்.?
தமிழக தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த ஆண்டே ஜூலை ஒன்றாம் தேதி புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்தது. ஆனால் கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் மாதம் வரை சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் இரண்டாவது முறையாக சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இன்னும் 3 தினங்களில் சண்முகத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் அண்மையில் மத்திய அரசு பணியிலிருந்த ராஜீவ் ரஞ்சனை தமிழக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார்.
தலைமை செயலாளர் பதவிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் மீன், கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சல் தலைமைச் செயலாளராக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்