பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு?
ஜனவரி 31- வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிப்ரவரி 28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50% க்கும் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்தவும் விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்