ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை!

டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள் தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகள், கொரோனா என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்க வைத்தனர். ஜம்மு – காஷ்மீர், லடாக், பீகாரில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தி ஆணையம் சாதனை செய்துள்ளது. தொடக்க்கத்தில் சீர்திருத்தத்திற்க்கான பாதை தவறான புரிதல்களை ஏற்படுத்தக் கூடும். 2020-ம் ஆண்டை கற்றுக்கொள்ளும் ஆண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கான தடுப்பூசியை நாமே கண்டறிந்து தற்சார்பு நிலையை எட்டியிருக்கிறோம்

உலக நாடுகளின் பேராதரவுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நுழைந்துள்ளது என கூறினார்..

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்