340 கோடி லாட்டரியில் பரிசு வென்ற பெண்!

கனடாவில் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண் ஒருவருக்கு ரூபாய் 340 கோடி பரிசு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கனடாவில் சமீபத்தில் ரூபாய் 340 கோடி பரிசு லாட்டரி ஒன்றின் குலுக்கல் நடந்தது
இதில் அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 340 கோடி பரிசை வென்றார். இவர் பரிசை வென்றதும் தனது பேட்டியில் கூறிய போது ’என் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து தான் கடந்த 20 வருடங்களாக லாட்டரி டிக்கெட் வாங்கி பரிசுகளை பெற்று வருகிறேன்

தற்போது சமீபத்தில் கணவர் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து தான் இந்த லாட்டரி சீட்டையும் வாங்கினேன்.

அதில் எனக்கு 340 கோடி பரிசு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறினார்

கணவர் கனவில் வந்த எண்களை வைத்து 340 கோடி பரிசுகளை லாட்டரியில் வென்ற பெண் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்