ரபேல் விமானம் சாகசம்! மேஜர் ஜெனரல் அலோக் கேகர் தகவல்?
தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு அணிவகுக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மேஜர் ஜெனரல் அலோக் கேகர் கூறியதாவது: “முதல்முறையாக ரபேல் விமானங்கள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் மக்களின் பார்வைக்கு காண்பிக்கப்பட உள்ளது. விமான சாகசங்களின் போது ரபேல் விமானத்தின் சாகசங்களும் இடம்பெறுகின்றது என்றார்.
அத்துடன் விமான சாகச த்தின் போது விமானங்கள் செங்குத்தாக வானில் பறந்து சுழன்று சுழன்று சாகசத்தை நிகழ்த்த உள்ளதாகவும், வித்தியாசமான வானவேடிக்கைகளை நிகழ்த்தப் உள்ளதாகவும், பெட்டிகள் சார்லி என்று கருதப்படும் விமான சாகசத்தில் முதன்முறையாக ரபேல் விமானங்கள் பங்கேற்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்”. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பை மக்கள் கண்டு மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்