உலகப் பாவை – தொடர் -23

சாதி ஒரு சாபக்கேடு

சாதியொரு சாபக் கேடு ;

சமூகச்சீர் அழிவுக்  கோடு;

சூதுமதி கொண்ட தீயோர் சூழ்ச்சியினால்  விளைந்த தீட்டு;

நீதியொரு சாதிக் கொன்றாய் நிலவுவதால் ஏற்றத் தாழ்வு வீதியிலே உருளக் கண்டு வேதனையே  திரளு தின்று;

பாதியிலே வந்த சாதி          பாடையிலும் தொடரும் சேதி

போதிமரப் புத்த னுக்கும்

புத்திதடு மாற வைக்கும் ;

சாதியடி வேரைப் போக்கிச் சமன்நிலையைக் காண மாந்தர் ஊதுகசங் கென்றே ஓதி

உலாவருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம்

6, முதல் முதன்மைத் தெரு, திருமலை நகர் இணைப்பு,

பெருங்குடி, சென்னை – 600096

அ. பே. 93821 83043