உலக பாவை – தொடர் – 22

           22. அன்புறவே

                 அனைத்துறவு

வென்னீரைப்  பாய்ச்சின் எந்த விளைச்சலும்கை கூட லில்லை; வன்முறையால் உலகம் என்றும் வாழ்ந்துவிடப் போவ தில்லை;

வன்முறையால் இடையில் நன்மை

வாய்க்குமெனில் நிலைப்ப தில்லை ;

வன்முறையால் கிடைக்கும் நன்மை

வழிமுறைக்கும் தீராத் தொல்லை;

அன்புறவால் தீமை கூட அடுத்தவரைத் தொடுதல் இல்லை ;

அன்புறவால் தோன்றும் நன்மை அண்டமெலாம் கடந்த எல்லை;

அன்புறவாம் அதனின் தன்மை அவனியெலாம் அறியச் செய்து வன்முறையர் மனதை மாற்றி வலம்வருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர்

கு. மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை