மோடியல்ல யாரை பார்த்தும் எனக்கு பயமில்லை_ ராகுல்காந்தி ஆவேச பேச்சு.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் 55-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிப்பு பிரதியை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

இந்த பிரதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். அதன் பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  • புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவிகிதம் ஆதரவு தருகிறேன். நமக்காக போராடும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரியும். ராகுல்காந்தி என்ன செய்வார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனக்கு ஒரு குணம் உள்ளது. நரேந்திரமோடி மட்டுமல்ல யாரைப்பார்த்தும் எனக்கு பயமில்லை.
  • அவர்களால் என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது
  • நான் தேசப்பற்றுமிக்கவன்.  எனது நாட்டை நான் பாதுகாப்பேன். அவர்களை (பாஜக) விட நான் தேசப்பற்றுமிக்கவன்.

என்றார்.  

செய்தியாளர் ரஹ்மான்