மட்டக்களப்பு மாவட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம். இது ஒரு அழகிய மாவட்டம். இது இலங்கையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் தற்போது பெரும் சேதம் அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களை இலங்கை நாட்டில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக நல்லூர் – யாழ்ப்பாணம் பகுதி பெரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று பெய்த தொடர் மழையால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. மட்டக்களைப்பு நகரில் குளங்கள் , ஆறுகள், பூங்காக்கள், கோவில்கள், வீடுகள் , ரோடுகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் செல்ல இடமில்லாமல் அங்கங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆதலால் அந்த பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு தற்போது இடம் பெயர்ந்து சென்று கொண்டுள்ளனர். இந்த தொடர் மழையால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்