நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல்
காசியாபாத் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ் நகர் பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் நஹர் சிங் யாதவ் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. நஹர் சிங் யாதவ் என்ற வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான விசாரணையின் போது நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆதாரங்களின்படி, வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமாகி, இறுதியில் வன்முறையாக மாறியது. இந்த நிலையில், நீதிபதி இருந்த அறையை காலி செய்து போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இத்தகைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான வரும் நிலையில், நீதிமன்ற அறைக்குள் ஏராளமான காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் மோதுவதைக் காட்டுகின்றன. சில அதிகாரிகள் தடியடி நடத்திக் கொண்டிருந்தனர், அதே சமயம் ஒருவர் மர நாற்காலியைப் பிடித்தபடி, எதிர் தரப்புடன் மோதலில் ஈடுபட்டதும் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.