கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். மூன்று டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

செய்தியாளர் ரஹ்மான்