உலகப் பாவை – தொடர் – 18
18.பொற்காலம் பூத்திடுக
மனிதனையோர் மனிதன் மண்ணில்
வதைத்தானென் றில்லா தெங்கும்
கனிந்ததுஅன் புறவு என்னும் காலந்தான் உயர்பொற் காலம்;
தனியொருவர் பசித்த ருந்தால் தாங்கார்அப் பசியைப் போக்க அணிதிரள்வார் மக்கள் என்னும் அக்காலம் உயர்பொற் காலம்;
நுனிவடக்கில் வாழும் மாந்தன் நுனிக்கால்முள் தைத்தால், மற்றோர்
நுனியிலே வாழும் மாந்தன் நெஞ்சில்முள் தைத்த தென்னும்
பனியுருகும் பிணைப்புத் தோன்றும்
பகலேபொற் காலம் என்று மனிதரெலாம் உணரக் கூறி வலம்வருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்