ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை

ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி என்று உண்மை சரிபார்ப்பகம் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது. ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரபு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெறுகிறது என்று உண்மை சர்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.