பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்ததாக தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்தார். 2021ஆம் ஆண்டு முதல் கோயில் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.