ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல்

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022 – 23ம் நிதியாண்டில் ரூ.1 .01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்தது. அதுவே 2023- 24ம் நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஆக அதிகரித்து உள்ளது.

இது குறித்த பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அந்நகரில் ரூ.70,985 கோடி மோசடி நடந்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டில்லி, புனே, குருகிராம் உள்ளன.டில்லியில் ரூ.18 , 313 கோடியும், புனே நகரில் ரூ.17,328 கோடியும், குருகிராம் நகரில் ரூ.15,502 கோடியும், ஹைதராபாத்தில் ரூ.11,081 கோடியும் வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது.

துறை வாரியாக

💰ஆன்லைன் விளையாட்டில் ரூ.81,875 கோடி

💰வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறையில் ரூ.18,961 கோடி

💰இரும்பு, காப்பர், மற்றும் உலோக துறையில் ரூ .16,806 கோடி

💰பான் மசாலா, புகையிலை, பீடி,சிகரெட் ஆகியவற்றில் ரூ.5,794 கோடி

💰பணி ஒப்பந்த துறையில் ரூ.2,846 கோடி

💰பிளைவுட், டிம்பர் மற்றும் பேப்பர் ஆகியவற்றில் ரூ.1,196 கோடி

💰மின்னணு பொருட்களில் 1,165 கோடி

💰மார்பிள், கிரானைட் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றில் ரூ.315 கோடி

💰மருந்து துறையில் ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது.

💰ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பாக 4,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2022- 23) 4,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.