ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது.

சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும்.

நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார்.

நாளை மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது.

வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும்.