கட்டிடங்கள் அகற்றும் பணி மேற்கொள்ள பி.கே.யுனிக் பிராஜெக்டுடன் வால்வோ இணைந்தது

சென்னை, செப். 9: பழமையான கட்டிங்கள் அகற்றும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் வால்வோநிறுவனம் அதன் பணியை மேலும் சிறப்பாக்க பி.கே.யுனிக் பிராஜெக்ட் நிறுவனத்துடன் இணைந்துளளது.
நாட்டில் இலகுரக வாகனல்கள் உள்பட கனரக வாகனங்கள் உற்பத்தி செய்வதில் வால்வோ நிறுவனம் முன்னிலையில் உள்ளது. நாட்டில் பழங்கால கட்டிடங்கள், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை வால்வோ நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பரிணாம வளர்ச்சியாக அதிகம் திறன் கொண்ட 75 டன் சக்தி வாய்ந்த வால்வோ சிகு என்ற பெயரில் EC750DUHR என்ற இயந்திரம் உற்பத்தி அதன் இணைப்பு நிறுவனமான அட்வான்ஸ்டு கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ACT), செய்து பயன்படுத்தி வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய இடிப்பு இயந்திரமாக,வால்வோ ( Volvoவின் EC750DUHR) ஆனது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான இடிப்பு நடைமுறைகளைக் காட்சிப்படுத்தியதன் மூலம், வால்வோ சிகு தரத்துடன் உள்ளது.
இது குறி்த்து வால்வோ இந்திய நிர்வாக இயக்குனர் டிமிட்ரோவ் கிருஷ்ணன் கூறும்போது, கட்டிடங்கள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி வருவதின் பாதுகாப்பான சேவையை வால்வோ வழங்கி வருகிறது. மிகவும் சவாலான சூழல்களில் ஒப்பிடமுடியாத ஆற்றல், துல்லியம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. EC750DUHR கிராலர் அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் நிலையான மற்றும் திறமையான கட்டிடம் அகற்றும் நடைமுறைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்து வருகிறோம், குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்துடன் திட்டங்கள் முடிக்கப்படுவதை உறுதிசெய்கிறோம், அதே நேரத்தில் ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கிறோம். கட்டிடங்கள் அகற்றும் பணியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வால்வோ நிறுவனம், இதே துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பிகே யுனிக் புராஜெக்ட்ஸுடன் தொழில்முறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இத்துறையின் மேம்பாட்டில் புதிய மையில் கல்லாக அமைந்துள்ளது என்றார்.