காங்கிரஸில் இன்று அதிகாரப்பூர்வமாக மல்யுத்த வீராங்கனை

காங்கிரஸில் இன்று அதிகாரப்பூர்வமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்திருந்த நிலையில் தகவல் வெளியாகியது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர்.5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வினேஷ் போகட் காங்கிரஸில் இணைய உள்ளார். வினேஷ் போகட் மட்டுமின்றி மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இன்று இணையவுள்ளார்.