உலகப் பாவை – தொடர் – 17

  1. எல்லாருக்கும் எல்லாம்
    வாழ்வோம்

எல்லார்க்கும் எல்லாம் வாழ்தல் எனுமுணர்வு பெருக்கெ டுத்தால்,
பொல்லாங்கு பூசல் எல்லாம் போய்மறையும் சுவடே இன்றி;

எல்லார்க்கும் எல்லாம் என்னும் ஏற்புநெறி உலகில் பூத்தால்,
இல்லாரென் றிருப்பார் இல்லை; இருப்பாரென் றில்லார் ஆவார்;

எல்லாரும் எல்லாம் என்னும் இணைப்புநெறி மண்ணில் தோன்றின்,
அல்லல்ஓர் அணுவும் இல்லா அமைதிநிலை இயல்பாய்த் தோன்றும்;

கல்மனமும் கரையும் வண்ணம் கருத்திதற்குச் சான்று காட்டி, ஒல்லுவகை எடுத்துக் கூறி உலாவருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்