ஜனவரி 16 அன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்லவேண்டாம்
காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்!
காணும் பொங்கல் ஜனவரி 16 அன்று பொதுமக்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
அதனை தொடர்ந்து உத்தண்டி, கானத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் கடற்கரை வருவதை J12 காவல் ஆய்வாளர் திரு,வேலு அவர்களின் உத்தரவின் பேரில் தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
அப்துல் ரஜாக் செய்தியாளர்
தமிழ் மலர் மின்னிதழ்