ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்!
சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று காலமான த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
இதையும் படிக்கலாமே.. பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா பயங்கரத்தில் முடிந்தது; வைரலாகும் கடைசி செல்ஃபி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் நேற்று காலமானார்.
இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மறைந்த பி.எஸ்.ஞானதேசிகன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மின்னிதழ்.