இந்தியாவில் மீண்டும் பரவும் ‘சந்திபுரா வைரஸ்’ – WHO எச்சரிக்கை
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 இடைப்பட்ட காலத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 245 பேருக்கு சந்திபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 64 பேர் உயிரிழப்பு
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, மணல் ஈக்கள் (Sandflies) மூலம் மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ், இந்தியாவில் வரும் வாரங்களில் மேலும் பலருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளது
சந்திபுரா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை
கடந்த 2003-ம் ஆண்டு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் பரவிய சந்திபுரா தொற்றால் 183 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது