விஜய் சேதுபதி”யின் 43 வது பிறந்த தினம் இன்று
தமிழ்த்திரையில் சினிமா பின்புலம் இல்லாமல் துணிவுடன் பல சோதனைகளையும்,வேதனைகளையும் சந்தித்து அவைகளை சாதனைகளாக மாற்றி குறுகிய காலத்தில் மக்கள் மனங்களை வென்ற “மக்கள் நாயகன்
விஜய் சேதுபதி”யின் 43 வது பிறந்த தினம் இன்று (16.01.2021)..இம்மியளவிலும் பந்தா இல்லாத மனிதநேயம் மிக்க ஓர் உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல ஆற்றலுடைய கலைஞர் விஜய் சேதுபதி.படத்துக்கு படம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஓர் பெரிய ரசிகர் கூட்டத்தையே தன்னகப்படுத்திய ஒப்பற்ற நடிகர்.எந்த பாத்திரமானாலும் இமேஜைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல்,நடிகனென்றால் எல்லா வேடங்களிலும் துணிவுடன் நடிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த “விஜய் சேதுபதி”க்கு இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மனமகிழ்கின்றோம்…
(எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை)
செய்தியாளர் விக்னேஸ்வரன்