இண்டிகோ நிறுவனம் அறிமுகம்! உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் ரூ.877.

உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் ரூபாய்,877 சிறப்பு சலுகை இண்டிகோ நிறுவனம் அறிமுகம்!

புதுடெல்லி: பட்ஜெட் கேரியர் இண்டிகோ தனது முதல் ‘தி பிக் ஃபேட் இண்டிகோ சேல்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விமான நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு ரூ .877 முதல் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இண்டிகோ ரூ 877 விமான டிக்கெட் சலுகைக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 17) முடிவடையும்.

இண்டிகோவின்சமீபத்தி ய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். “ஏப்ரல் 1, 2021 மற்றும் செப்டம்பர் 30, 2021 க்கு இடையிலான காலத்தில், இண்டிகோ வின் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணம் செய்வதற்கு இந்த சலுகை பொருந்தும்” என்று இண்டிகோ அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்த ‘Big Fat Sale Offer’-ல் சலுகை விலையில் மொத்தம் எத்தனை டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பது பற்றி விமான நிறுவனம் குறிப்பிடவில்லை.

“சலுகையின் கீழ் வரையறுக்கப்பட்ட சீட்டுகள் கிடைக்கின்றன. எனவே, பயணத்திற்காக மிச்சமிருக்கும் சீட்டுகள் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டு சலுகைகள் வழங்கப்படும்” என்று விமான நிறுவனம் கூறியது. இண்டிகோவின் (IndiGo) விற்பனை சலுகைக்கான முன்பதிவுகளை, முன்பதிவுக்கான வழக்கமான அனைத்து முறைகளிலும் சலுகை காலத்தில் செய்ய முடியும்.

குருகிராமை சார்ந்த விமான நிறுவனமான இண்டிகோ, “இந்த சலுகை மாற்ற முடியாதது. இதை பரிமாற்றம் செய்யவோ பணமாக மாற்றிக்கொள்ளவோ முடியாது. பயணத்திட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு பிரிவுக்கு ஒரு பயணிக்கு ரூ .500 கட்டணம் வசூலிக்கப்படும். பயணத்தில் செய்யப்படும் மாற்றங்காளுக்கு ஒரு பிரிவுக்கு ஒரு பயணிக்கு 500 ரூபாய் கட்டணமும், தேதி மாற்றத்திற்கான கட்டண வேறுபாடும் வசூலிக்கப்படும். இதை சலுகையின் கால அளவிற்குள் இதை செய்ய வேண்டும்” என்று கூறியது.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில், உள்நாட்டு பயணங்களுக்கான (Domestic Travel) ஒன் வே மற்றும் ரௌண்ட்-ட்ரிப் நான்-ஸ்டாப் விமானங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இருப்பினும், இந்த சலுகை இண்டிகோவின் மொத்த முன்பதிவுகளுக்கு பொருந்தாது என்று இண்டிகோ கூறியுள்ளது.

SpiceJet Sale! உள்நாட்டு டிக்கெட்டுகள் வெறும் ரூ .899க்கு: விவரங்கள் இங்கே

இண்டிகோவின் வலைத்தளமான www.goindiho.in -ன் படி, டெல்லி-பாட்னா இடையேயான டிக்கெட்டுகள் ரூ .2,200 முதல் தொடங்குகின்றன. டெல்லி-கொல்கத்தா வழிக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 1 பயணத்திற்கு ரூ .2,480 க்கு விற்கப்படுகின்றன. ரூ .877 விளம்பர திட்டத்தின் கீழ், விமான நிறுவனம் டெல்லி-பெங்களூரு விமான டிக்கெட்டுகளை ரூ .3,030 க்கும், டெல்லி-புவனேஸ்வர் டிக்கெட்டுகளை ரூ .2,696 க்கும் வழங்குகிறது. பிற உள்நாட்டு வழித்தடங்களிலும் இவ்வாறான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இண்டஸ்லேண்ட் வங்கி (IndusInd Bank) அட்டையைப் பயன்படுத்தி சலுகைக் காலத்தில் இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக ரூ .5,000 வரை 12 சதவீத கேஷ்பேக்கை வழங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இண்டிகோ விமானங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது குறைந்தபட்சம் ரூ .3,000-க்கு முன்பதிவு தொகை இருந்தால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.

மேலும், பயணிகள் HSBC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம். அனைத்து கட்டண வகைகளிலும் ரூ .750 வரை 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ .3,000 -க்கு முன்பதிவு செய்தால் விளம்பர சலுகை கிடைக்கும். கேஷ்பேக்கை மாற்ற முடியாதது, பரிமாற்றம் செய்ய முடியாதது மற்றும் பணமாகவும் மாற்றிக்கொள்ள முடியாது. மேலும் இந்த சலுகை ஈ.எம்.ஐ (EMI) மற்றும் ஈ.எம்.ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் வல்லமை மின்னிதழ்.