புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு
புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 108 கனஅடியில் இருந்து 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,479 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கன அடியாக உள்ளது.