சம்மன் மற்றும் ஜாமீனில்
சம்மன் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்களை நிலுவை வைக்காமல் உடனடி தீர்வு காண நடவடிக்கை
சம்மன் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளை நிலுவையில் வைக்காமல் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். சித்தூர் எஸ்பி மணிகண்டா நேற்று சித்தூர் ரூரல் மண்டலம் பேட்டை காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய நிர்வாகம், ஊழியர்களின் பணி முறை, பணிகள், முக்கிய வழக்குகளின் விசாரணை, ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வழக்கு டைரி, கிராமப் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றப் பதிவுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
அதன்பின், காவல் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வாகனங்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். போக்குவரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சாலை பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி, பள்ளிகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.