வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவுக்குள் தீர்ப்பு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சிஏஎஸ் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன் எடை பார்த்தபோது 50 கிலோவைவிட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்தும் வெள்ளி வழங்கக் கோரியும் விளையாட்டுக்கான சமரச நீதிமன்றத்தை வினேஷ் நாடியுள்ளார்.