சுதந்திர தினத்தன்று அமலாகிறது

அரியானா பள்ளிகளில் மாணவர்கள் குட்மார்னிங் சொல்லக்கூடாது ஜெய்ஹிந்த் சொல்ல அரசு உத்தரவு:

அரியானாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குட்மார்னிங் சொல்லக்கூடாது என்றும் ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில்,அனைத்து பள்ளிகளுக்கு, மாநில பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தேச பற்று, நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில், ஆக.15ம் தேதி முதல், பள்ளிகளில் காலையில் குட்மார்னிங்குக்கு பதில் ஜெய்ஹிந்த் என்று சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போதும், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை தூண்டும். நாட்டின் வரலாற்றை மதிப்பதற்கான பழக்கம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.