அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம்
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிகவும் சிறிய அளவிலான மைதானத்தில் 1,000 பேர் வரை அனுமதிக்க இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.