நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! -தொடர்-5
நமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….!
முருங்கைப்பூ பக்கோடா இதை செய்வதற்கு 2 கைப்பிடி அளவுள்ள முருங்கைப்பூ, ராகி மாவு கால் கிலோ, வெங்காயம் கால் கிலோ, அளவான மிளகாய்த்தூள் சுவைக்கேற்ப உப்பு பொட்டுக்கடலை மாவு100 கிராம்.
வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி, மிளகாய்த்தூள், உப்பு பொட்டுக்கடலை மாவு, ராகி மாவு, ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பதமாக பிசைந்து அந்த மாவை இளம் சூட்டில் எண்ணெயில் வறுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான பக்கோடா ரெடி.
முருங்கைப் பூ ரசம்… ஒரு கைப்பிடி முருங்கைப்பூ, பூண்டு, சீரகம், கடுகு, மிளகு, கருவேப்பிலை, அதாவது பொதுவாக ரசம் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும்.
முருங்கைப் பூவுடன் பூண்டு, சீரகம், மிளகு, சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
கரைத்து வைத்த புளியை ஊற்றி தாளித்து பின்பு அரைத்த முருங்கைப்பூ விடுதிகளை பாத்திரத்தில் ஊற்றி நுரை கட்டியவுடன் பிறக்கவும் அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்.
வழக்கம்போல் எண்ணெயில் கடுகு பொரிந்தவுடன் அரைத்து வைத்த முருங்கைப்பூ விழுதை சற்று வனக்கி கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்காமல், நுரையாக பொங்கி வந்ததும் இறக்கி வைத்தால் முருங்கைப்பூ ரசம் ரெடி….
இது போன்ற சத்துள்ள ரெசிபிகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்.
எதையும் வருமுன் காப்போம்…!
நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119