வைகோ கண்டனம்
பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை.
தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2024-25 வரவு செலவு அறிக்கையில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி ,நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 கூறுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இளைஞர்கள்,பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் கடந்த ஆறு முறை நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது தான், ஆனால் செயல்பட்டிற்கு வந்ததா என்பதுதான் கேள்விக்குறி.