குறைகிறது, தங்கம், செல்ஃபோன் விலை
செல்போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
செல்ஃபோன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் அறிவிப்பால், நாட்டில் செல்ஃபோன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் மீதான சுங்க வரி 6% ஆக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளி மீதான சுங்க வரியும் 6.5%ஆக குறைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தங்கம், வெள்ளி அளவு அதிகரித்து, அவற்றின் விலை குறையக்கூடும் எனக் கூறப்படுகிறது