இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் : ராகுல் காந்தி

இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் : ராகுல் காந்தி

இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் . பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.