நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் விதிகளை பின்பற்ற சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 31ல் தொடங்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 8ல் முடிகிறது. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் குடில் அமைக்கவோ, தங்கவோ கூடாது என்றும் பிளாஸ்டிக், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு, மண்ணெண்ணெய்யை வனத்துக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது