இந்திய கிரிக்கெட் அணி 3 டி.20, 3 ஒருநாள் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி 3 டி.20, 3 ஒருநாள் போட்டியில் ஆடுவதற்காக இன்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக மும்பையில் இன்று காலை புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்தார். இலங்கையுடன் முதலில் டி.20 தொடர் வரும் 27, 28 மற்றும் 30ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்து புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்கிறார்.
துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், நெதர்லாந்தின் முன்னாள் வீரர் டென் டோஸ்கேட் நியமிக்கப்பட்டுள்ளனர். பவுலிங் பயிற்சியாளராக தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல்லிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடைக்கால பவுலிங் கோச்சாக சாய்ராஜ் பகதுல்லே செயல்பட உள்ளார்