இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவு
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது பழனியில் ஆக. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.: அமைச்சர் சேகர்பாபு
இம்மாநாட்டில் அறுபடை வீடுகளின் காட்சியரங்கம், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவை அமைக்கப்படுவதோடு, சிறப்பு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர்கள் வெளியிடப்படுகின்றன. முருகப் பெருமானின் சிறப்பு பாடல் ஒன்று 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டின் இரண்டு நாட்களும் கலந்துக் கொள்கின்ற சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், சான்றோர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிகம் சார்ந்த மாநாட்டில் இந்த மாநாடு தான் மிகப்பெரிய மாநாடாக இருக்கும், அந்த வரலாற்றையும் படைக்கப் போகின்றவர் முதல்வர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியானது சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சியாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு யார் செய்திருந்தாலும் எப்பேர்பட்ட உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. தவறு செய்தவர்கள் மீது இன்னார் இனியவர் என்று பார்க்காமல் கடுமையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகின்றார்.
இதை அனைத்து ஊடகங்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.