அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
2-வது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர்.
ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில் 35 நாட்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். கேரளாவில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றொரு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.