கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார்

கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்தார். சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜின் 17 வயது மகன், நேற்று முன்தினம் அதிகாலை காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். சிறுவனின் தந்தை மற்றும் கார் உரிமையாளரான சிறுவனின் தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி மேற்குவங்கத்தைச் சேர்ந்த அக்‌ஷய் வேரா (23), அவிநாசி சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தவர்.✳️✳️