கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழை சாதகமாக இருக்கும்போது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்