நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 4
நமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….!
முருங்கை பூ சூப் செய்ய, 100 கிராம் முருங்கைப்பூ, 300 மில்லி தண்ணீர்.
பூவை சுத்தம் செய்து, சுவைக்கு ஏற்ப கல் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி ஆறியவுடன் அருந்தலாம் சுவையான முருங்கைப்பூ சூப்பை..!
முருங்கைப்பூ பொரியல் செய்ய தேவையான முருங்கைப்பூ இரண்டு கைப்பிடி அளவுகடுகு கருவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு தேவையான அளவு, அரை மூடி தேங்காய் 3 பச்சை மிளகாய்.
பொரிப்பதற்கு தேவையான அளவு நல்லெண்ணெயில் வழக்கம்போல் முதலில் கடுகை பொரித்துக் கொள்ள வேண்டும் தொடர்ந்து கருவேப்பிலை வெங்காயம் மிளகாய் இவற்றை பொன்னிறமாக வறுக்கவும்.
சுத்தம் செய்த முருங்கை பூ, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும் பின்பு 100 மில்லி தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றியவுடன் அரைமூடி தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறவும்.
தேவைப்பட்டால் தேங்காய்க்கு பதிலாக நான்கு முட்டை சேர்த்து வதக்கவும் இப்போது சுவையான முருங்கைப்பூ பொரியல் ரெடி..!
முருங்கைப்பூ கூட்டு…. முருங்கைப்பூ 300 கிராம், சின்ன வெங்காயம் 100 கிராம், பச்சை மிளகாய் 4, பாசிப் பருப்பு 50 கிராம், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடி எண்ணெய், நெய் ஒரு தேக்கரண்டி, கடுகு, சீரகம், வரமிளகாய் 2, கருவேப்பிள்ளை…
சுத்தம் செய்த முருங்கைப்பூவை
வாணலியில் நெய் விட்டு வதக்கி எடுத்து கொள்ளவும்.
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடாக அதாவது, பாதி அவியலாக வேக வைக்கவும் அதில் வதக்கிய முருங்கைப்பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சாம்பார் பொடி சேர்த்து வேகவைத்து வெந்ததும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து இறக்கி வைத்தால் முருங்கைப்பூ கூட்டு ரெடி..
இதுபோன்று சத்து மிகுந்த ரெசிபியான முருங்கைப்பூ பக்கோடா மற்றும் ரசம் செய்முறை இனி பார்க்கலாம்.
எதையும் வருமுன் காப்போம்…!
நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119