அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

சேலத்தில் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மரவனேரி பகுதியில் உள்ள அணைமேடு ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 650 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலம் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி போக்குவரத்தை இணைக்கிறது.