எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே பயங்கர கும்பல் கொலை செய்தது. இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவர் உயிரிழந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இந்த கொலை தொடர்பான பல்வேறு காரணங்களையும் ஆதாரங்களையும் தொடர்ந்து போலீசார் திரட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் இதன் பின்புறம் இருப்பது யார் என்பது குறித்து விசாரணை நடத்த கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் முடிவு செய்தனர். அந்த அடிப்படையில் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொதுவாக காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவில் குற்றவாளிகள் நேரில் ஆஜர்படுத்தப்படுவர். ஆனால் இந்த வழக்கில் விசாரணையின் தன்மையை கருதி இவர்கள் 11 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். காவல்துறை தரப்பில் 7 நாள் போலீஸ் காவல் கேட்கப்பட்ட நிலையில் 5 நாட்கள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.