தூத்துக்குடி VVSP மஹாலில்
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து விருந்து வழங்கிய கனிமொழி எம்.பி
தூத்துக்குடி VVSP மஹாலில், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சைவ மற்றும் அசைவ விருந்து வழங்கினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கனிமொழி எம்.பி. விருந்து வழங்கினார். மேலும், நிர்வாகிகளுக்கு இனிப்பு பரிமாறி, நலம் விசாரித்தார். தொடர்ந்து, நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்