தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தென்காசி குற்றாலம், செங்கோட்டை, மேலகரம், இலஞ்சி, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது