மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு ஏற்பாடு நடந்தபோது நேரிட்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். மகாலிங்கம் (60) என்பவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 4 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரின் மீது கும்பம் ஏற்றிக் கொண்டிருந்தபோது கயிறு அறுந்து தேர் சாய்ந்து விபத்து நேரிட்டுள்ளது