ராகுலுக்கு நெட்டிசன்கள் பதிலடி

மின்னணு வாக்கு எந்திரம் சந்தேகம் எழுப்பும் ராகுலுக்கு நெட்டிசன்கள் பதிலடி

போற போக்குல ஆதாரமே இல்லாமல் இந்தியாவின் தொழில்நுட்பம் மேல் குற்றம் சாட்டியுள்ளார் டெல்ஸாவின் எலான்மஸ்க்.

அதற்கு ஆதரவாக ராகுல் மின்னணு மேல் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்றால் இப்போது நடந்த தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி ஜெயித்தது என்றால் அதுவும் முறைகேடு என்பதை ஒப்புக்கொள்கிறாரா ராகுல்?

அப்படியானால் தமிழகத்தில் 39 இடங்களில் கூட்டணி ஜெயித்தது என்றால் அதுவும் முறைகேடா? என கேட்கிறார்கள்.

டெஸ்லா நிறுவனருக்கும் மோடிக்கும் வேறு பிரச்சனை. கார் தொழில்சாலையை இந்தியா கொண்டு வர அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியோ, “மேக் இன் இந்தியா” திட்டத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்வதாக இருந்தால் அனுமதி தருவதாக கூறினார். அதனால் மோதல் போக்கை கடைபிடிக்குறார் எலான்மஸ்க்.

அதற்கு தான் மின்னணு இயந்திரம் முறைகேடு அது இதுன்னு கொளுத்தி போட்டுள்ளார் எலான்மஸ்க்.

மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது என்றும் அப்படினா உங்க காரையும் ஹேக் செய்ய முடியுமா? என கேட்டு பதிலடி தந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர்.

எலான்மஸ்க் இந்திய தொழில்நுட்பம் மேல் சந்தேகம் கிளப்புகிறார் என்றால் அவர் வெளிநாடு.

ஆனால் ராகுல்காந்தி அவ்வாறு சந்தேகம் கிளப்புவது சரியா? என பதிவிட்டுள்ளனர்.