ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சி வரை செல்லக்கூடிய பேருந்து நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது குறுக்கே கால்நடைகள் சென்றதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் இறங்கி மின் கம்பத்தில் மோதி விபத்து.
பயணிகள் 12 பேர் சிறு காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது குறித்து செந்துறை போலீசார் விசாரணை