திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது,மூக்கு, தொண்டை பிரிவில் பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்கும் பிரத்யேக அறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவில் பேச்சுத்திறன், செவித்திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளை வழங்க ரூ.10 லட்சம் மதிப்பில் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு,டாக்டர் யோகானந்த் திறந்து வைக்க பயன்பாட்டிற்கு வந்தது.