மீன்பிடிப்பு தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல்
கன்னியாக்குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடிப்பு தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.